விழுப்புரம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி தவறி விழுந்ததில் காயமடைந்து உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே கோலியனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வீரம்மாள்(85). இவர், இரு தினங்களுக்கு முன்பு சாலை அகரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, தனது வீட்டை நோக்கி கிழக்கு பாண்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனம் ஒன்று அவர் மீது மோதுவது போல வந்ததால், அதிர்ச்சியடைந்து, விலக முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். வளவனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (30.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (31.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (31.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (31.05.2026) - மேஷம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


