இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குபேர்-சித்ரலேகா திருக்கல்யாணம்

திண்டிவனத்தை அடுத்த மொளசூரில் அமைந்துள்ள லஷ்மி குபேர் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:10 am

DIN

திண்டிவனத்தை அடுத்த மொளசூரில் அமைந்துள்ள லஷ்மி குபேர் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
காலை 7 மணி அளவில் மங்கள வாத்தியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, திருமஞ்சணம் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 முதல் 7.30 மணி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் குபேரன் மணமகன் கோலத்திலும் சித்ரலேகா மணப்பெண் கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு அவர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராக பைரவி கலைக்கூட மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜயலட்சுமி குபேர டிரஸ்ட் தலைவர் குபேர முருகன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.