ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கருணாநிதி மறைவு: அரைக்கம்பத்தில் பறந்த அதிமுக கொடி!

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலத்தில் நெடுஞ்சாலையோரம் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, துக்கம் அனுசரிக்கும் வகையில் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன.
புதன்கிழமை காலை, அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தகவல் அறிந்து போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனர். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கொடிகளையும் அரைக்கம்பத்தில் பறக்க விட்டதாக கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சாலையோரம் கொடிக் கம்பம் அமைந்துள்ளதால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இதனை தவறாகப் புரிந்து கொண்டு அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. ஆகவே, அதிமுக கொடியை முழுக் கம்பத்தில் ஏற்றி பறக்க விடுமாறு  போலீஸார் அறிவுறுத்தினர். இதனை ஏற்று, அங்கிருந்தவர்கள் அதிமுக கொடியை மீண்டும் முழுக் கம்பத்தில் ஏற்றி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.