செஞ்சி வட்டம், அனந்தபுரத்தில் உள்ள செட்டிக்குளம் சுமார் 50 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது. எனவே, உடனடியாகக் குளத்தைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அனந்தபுரம், சிற்றரசூர் ஆகிய இரண்டு ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது செட்டிக்குளம். மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் குளத்தின் மேல்புறத்தில் உள்ள மலையில் இருந்து வரும் மழை நீரால் நிரம்புகிறது. சிறிதளவு மழை பெய்தால்கூட இந்தக் குளம் நிரம்பிவிடும். குடிநீருக்காவும் இந்தக் குளத்தின் நீர் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக இந்தக் குளம் தூர்வாரப் படாததால், சரியாகத் தண்ணீர் தேங்குவதில்லையாம். இதனால், சேரும் சகதியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அப்படியே மழை பெய்து நீர் தேங்கினால், தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை என்றும், குளம் நிரம்பி வழிந்தால் வெளியேறும் வழி உள்ள பகுதியில் குளத்து நீரை சிலர் விவசாயத்துக்குப் பயன்படுத்த திறந்து விடுவதால் விரைவில் குளம் வற்றிவிடுவதாகவும், எனவே நீர் வெளியேறும் இடத்தில் சிறிய அளவிலான தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், அனந்தபுரம் பேரூராட்சி நிர்வாகம் குளத்தை முழுமையாகத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்தால் தூர்வார முடியாது எனவும் அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





