எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அண்ணாமலை பாலிடெக்னிக்கில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

உளுந்தூர்பேட்டை வட்டம், பாதூர் ஸ்ரீஅண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:20 am

தினமணி

உளுந்தூர்பேட்டை வட்டம், பாதூர் ஸ்ரீஅண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
 பாதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் கல்லூரித் தாளாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
 கல்லூரி முதல்வர் ஆனந்த்பாலாஜி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுகுமார் வரவேற்றார்.
 விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி கணிதவியல் பேராசிரியர் கணேசன், பள்ளியின் தலைமையாசிரியர் கெஜலட்சுமி மற்றும் உதவித் தலைமையாசிரியர் செல்வி சிறப்புரையாற்றினர்.
 இதனைத் தொடர்ந்து செங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலகுரு மற்றும் குழுவினர் பங்கேற்ற தொழுநோய் குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
 பேரணியில் கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், பள்ளித் தமிழாசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்படபலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.