குடும்பப் பிரச்னையில் விஷம் தின்றவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கீழ்நடுத்தக்கா பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவரது மகன் ஜெயப்பிரகாஷ், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். ரவி கடன் பெற்று தனது மகனை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாராம். ஆனால், ஒரே மாதத்தில் ஜெயப்பிரகாஷ் வெளிநாட்டில் இருந்து திருப்பி வந்து விட்டாராம்.
இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், ரவி மனமுடைந்து கடந்த 17-ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத் தன்மையுடைய எலி பேஸ்ட் தின்றுவிட்டாராம்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்த கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


