சங்கராபுரத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்க முன்னாள் தலைவர் சி.சீனுவாசன் தலைமை வகித்தார். வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத் தலைவராக ஆர்.பிரகாசம், செயலராக கோ.குசேலன், பொருளாளராக எம்.ராஜேந்திரன், துணைத் தலைவராக எஸ்.செல்வம், துணைச் செயலராக எம்.நெடுஞ்செழியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கராபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு, காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தையும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தையும் புதிதாக நிறுவி செயல்படுத்த வேண்டும்.
சங்கராபுரத்தில் பெரும்பாலான வீதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு ஏதுவாக லாரி வாங்க பேரூராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க முன்னாள் செயலர் ஆர்.சாதிக்பாட்ஷா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

