தியாகதுருகத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகம் சுயமரியாதைச் சுடரொளிகள் கோ.சாமிதுரை, மு.கண்ணன், அ.கூத்தன் ஆகியோரது நினைவு விழா மேடையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். தியாகதுருகம் திமுக நகரச் செயலாளர் மிசா.பொன்.இராமகிருட்டிணன், விழுப்புரம் மண்டல தி.க. தலைவர் க.மு.தாஸ் செயலாளர் குழ.செல்வராசு, உலகத்தமிழ் கவிஞர் பேரவை கு.சீத்தா முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அவர் பேசும்போது, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு மற்றும் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு நீங்கி அனைவரும் அனைத்தும் பெற்று வாழ்வதற்காக பெரியார் நடத்திய போராட்டங்கள், அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் தலைமைக் கழக சொற்பொழிவாளர் பிராட்லா, தி.க. மருத்துவரணி மாநில பொதுச் செயலர் கோ.சா.குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திக மாநில இளைஞரணி செயலர் த.சீ.இளந்திரையன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சு.அருணாசலம், மாவட்ட திக துணைத் தலைவர் ஓவிய இமயம் மு.கலைச்செழியன், நைனார்பாளையம் திக தலைவர் புலவர் கு.அண்டிரன் உள்ளிட்டோர் பேசினர்.
மாவட்ட திக அமைப்பாளர் த.பெரியசாமி மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், கள்ளக்குறிச்சி திக ஒன்றியத் தலைவர் புலவர் பெரியார் நேசன், தியாகதுருகம் ஒன்றிய திக தலைவர் மொ.தண்டபானி, விழுப்புரம் மாவட்டச் செயலர் சே.வ.கோபன்னா, விருத்தாசலம் மாவட்டச் செயலர் முத்து கதிரவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பெ.எழிலரசன் தொகுத்து வழங்கினார். கள்ளக்குறிச்சி நகர திக தலைவர் ச.சுந்தரராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அருங்காட்சியகத்தில் கோடீஸ்வரர்களின் முகத்துடன் திரியும் நாய்கள்!

பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை பாதுகாக்க முன்வரும் ஆனந்த் அம்பானி!

சீரடியில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த நடிகை கனிகா!

சீரடி சாய் பாபா கோயிலில் Vijay! | TVK
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

