சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நூல் வெளியீட்டு விழா

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம், திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா தியாகதுருகத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:49 am IST

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம், திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா தியாகதுருகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 உலக தமிழ்க் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் புலவர் கு.சீத்தா தலைமை வகித்தார். கல்லை திருக்குறள் நடுவம் தலைவர் அய்யா.மோகன், கவிமாமணி முத்தமிழ்முத்தன், தொழில் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் த.பழனிவேல், ஓய்வுபெற்ற ஆசிரியர் நா.சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 திருக்குறள் பேரவைச் செயலாளர் சி.நரேன்ராசு எழுதிய, "கவிச்சுடரின் கவிமுத்துக்கள்' என்ற நூலினை தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளிக் குழுமங்களின் தாளாளர் பொன்.இரா.மணிமாறன் வெளியிட, மருத்துவர் வி.ஏ.ரஹமத்துல்லா முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
 புதுச்சேரி சிவசு கல்வி இலக்கிய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாவலர் சு.சண்முக சுந்தரம், கல்லை தமிழ்ச் சங்க மகளிர்அணிச் செயலாளர் கோ.காயத்ரி நூலினை திறனாய்வு செய்தனர். தமிழப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் செ.சு.மலரடியான், திருக்குறள் பேரவை சிறப்புத் தலைவர் ப.கோ.நாராயணசாமி, கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதிவாணன், தியாகதுருகம் தமிழ்ச் சங்க செயலாளர் இதயம் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் பேசினர்
 நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை துணைத் தலைவர் வா.ச.கணேசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.அறிவழகன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்திரராஜன், பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.