முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

விழுப்புரத்தில் பூக்கள் விலை உயர்வு

தீபாவளிப் பண்டிக்கையையொட்டி, பூக்களின் தேவை அதிகரித்ததால் அவற்றின் விலையும் உயர்ந்தது. பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பூக்களை வங்கிச் சென்றனர்.

Updated On :5 நவம்பர் 2018, 9:19 am IST

தீபாவளிப் பண்டிக்கையையொட்டி, பூக்களின் தேவை அதிகரித்ததால் அவற்றின் விலையும் உயர்ந்தது. பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பூக்களை வங்கிச் சென்றனர்.
 விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பூக்களின் தேவை தீபாவளிப் பண்டிகையின்போது அதிகமாக இருக்கும். விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மொத்த விலை பூக்கடைகளில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து பூக்களை வங்கிச் செல்வர்.
 இந்த நிலையில், பூக்களின் தேவை அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை பூக்களின் விலை உயர்ந்தது.
 சனிக்கிழமை கிலோ ரூ.200-க்கு விற்பனையான முல்லைப் பூ ஞாயிற்றுக்கிழமை ரூ.600-ஆக உயர்ந்தது. மல்லிப் பூவின் விலை கிலோ ரூ.350லிருந்து ரூ.600-ஆக அதிகரித்தது.
 மேலும், ரூ.100-க்கு விற்பனையான சாமந்திப் பூவின் விலை ரூ.200-ஆகவும், ஜாதிமல்லி, காக்கட்டான் பூக்களின் விலை கிலோ ரூ.300லிருந்து ரூ.500-ஆகவும் உயர்ந்தது.
 இதேபோல, சம்பங்கி, ரோஜா, அரளி, துலுக்க சமந்தி ஆகிய பூக்கள் ரூ.20 முதல் ரூ.40 வரை விலை உயர்ந்தது. அதிகபட்சமாக கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.
 பூக்களின் விலை ஒரே நாளில் அதிகரித்துள்ளது குறித்து பூ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நீலகண்டன், ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:
 விழுப்புரம் சுற்றுப்புரத்தில் பூ விளைச்சல் கிடையாது. திண்டிவனம், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும் ஒசூர், பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது, பனிக் காலம் என்பதால், சாமந்திப் பூக்கள் தவிர்த்து, மல்லி, முல்லை போன்ற பூக்கள் இயல்பாக குறைந்த அளவில் வரத்து இருக்கும். கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்ததால், சாமந்திப் பூ சாகுபடியும் பாதிக்கப்பட்டது. அதனால், பூக்களின் வரத்து மேலும் குறைந்தது.
 இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. ஆனால், அந்த அளவுக்கு பூக்கள் உற்பத்தி இல்லாததே, ஒரே நாளில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு காரணம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.