தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் வ.உ.சி, டாக்டர் ராதாகிருஷ்ணன், பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, ஆசிரிய செம்மல் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
தியாகதுருகம் தனியார் தொழிற்பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தொழிற் பயிற்சிப் பள்ளியின் தாளாளர் நீ.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியை நீ.பத்மாவதி, சமுதாய பராமரிப்பு கமிட்டி இயக்குநர் பெ.நல்லாப்பிள்ளை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சு.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் வரவேற்றார்.
வ.உ.சி, டாக்டர் ராதாகிருஷ்ணன், பெரியார், அண்ணா உள்ளிட்டோரின் உருவப் படங்களுக்கு சங்கராபுரம் வள்ளலார் மன்றச் செயலர்
இரா.நாராயணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் கலைச்செழியன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தி.மா.சுப்பிரமணியன், தியாகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நா.ஜெயசுந்தரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன் தொடக்க உரையாற்றினார். ச.சாதிக்பாட்சா, அருள்நாதன் தங்கராசு, ஆ.இலட்சுமிபதி, இரா.நெடுஞ்செழியன், அ.சி.சின்னப்ப தமிழர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புணர்ச்சி விதும்பல் திருக்குறள் அதிகாரத்துக்கு புலவர் பெ.சயராமன் விளக்க உரையாற்றினார். நான்கு தலைவர்கள் குறித்து கவிஞர்கள் பாரதிகிருஷ்ணன், இரா.கதிர்வேல், பி.கோவிந்தன், சு.மோகன், செ.வ.மதிவானன் ஆகியோர் கவிதை பாடினர்.
சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற, புதுபல்லகச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சோ.அரங்கண்ணல், திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கவுஸ் சாதிக் ஷெரீப், மற்றும் ஆசிரிய செம்மல் விருது பெற்ற தனியார் தொழிற் பயிற்சிப் பள்ளி முதல்வர் த.பழனிவேல், பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.செல்வி, சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கி.புவனேசுவரி, வளவனூர் ஸ்ரீராம் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை பா.கார்த்திகாராணி ஆகியோருக்கு விரியூர் இமாகுலேட் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் அ.பாத்திமா நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் பெ.நாகராசன், வளவனூர் தமிழ்ச் சங்க செயலாளர் முருகன், பீளமேடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை உள்ளிட்ட பலர் பேசினர். கவிஞர் செல்வி பழனிவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடுகப்பட்டி, திருநல்லூா் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
ஆயுதக் கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினா் தில்லியில் கைது

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
