விழுப்புரம் மாவட்டத்தில் கோடையில் கரும்புப் பயிரில் ஏற்பட்டுள்ள இளங்குருத்துப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் கூறியதாவது: கோடை காலத்தில் கரும்பு நடவு செய்த பின்னர் 90 நாள்கள் வரை கரும்பு பயிரை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளில் இளம் குருத்துப் பூச்சி முக்கியமானதாகும்.
கரும்பு நடவு மற்றும் கட்டை கரும்பின் நடுத்தண்டுப் பகுதியை துளைத்து உள்ளே சென்று இந்தப் பூச்சிகள் பாதிப்பை ஏற்படுத்துவதால், கரும்பின் நடுக்குருத்து காய்ந்துவிடும். இதனால், காய்ந்த நடுக்குருத்துப் பகுதியை கையால் பிடுங்கியே எளிதாக அகற்றிட முடியும். இந்தப் பூச்சி தாக்கத்தால் கரும்பு வயலில் வெற்றிடங்கள் ஏற்பட்டு, கரும்பு மகசூல் குறைகிறது.
பூச்சியை கட்டுப்படுத்தும் முறை: இளங்குருத்துப் புழுவின் பாதிப்பை தடுக்க 5 கிலோ கார்டாப் ஹைட்ரோ குளோரைடு மருந்தை 5 பங்கு மணலுடன் கலந்து கரும்பு நடவு செய்யும்போது வயலில் இட வேண்டும். இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் கரும்பு வயல்களில் வைப்பதன் மூலம் இளங்குருத்துப் பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம்.
தண்ணீர் வசதியுள்ள வயல்களில் பயிரை காயவிடாமல் குறைந்த இடைவெளியில் (4 நாள்களுக்கு ஒரு முறை) நீர் பாசனம் செய்வதால், இளங்குருத்துப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். 60 நாள்களான பயிரின் அடிப்பகுதியில் குறைந்த அளவு மண் அணைப்பதின் மூலமும் இந்தப் பூச்சி தாக்குதலை குறைக்கலாம் எனத்
தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


