செஞ்சியை அடுத்த மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுக் கடையுடன் கூடிய மதுபானக் கூடத்தில் புதுச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீஸார் மேல்களவாய் அரசு மதுக் கடையுடன் கூடிய மதுபானக் கூடத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, அங்கு புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 1,622 பிராந்தி வகை மதுப் புட்டிகளையும், 144 பீர் வகை மதுப் புட்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, விழுப்புரம் சாலையைச் சேர்ந்த ராஜீ (எ) சாமிக்கண்ணு மகன் பாபு, செஞ்சி சிறுகடம்பூர் கருணா மகன் கார்த்தி (25) ஆகியோர் மீது செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, கார்த்தியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாபுவைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளின் மொத்த மதிப்பு
ரூ 2 லட்சம் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது
பாவூா்சத்திரத்தில் போதைப் பொருள்கள் விற்பனை: அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட மூவா் கைது

குளச்சல் நகராட்சியில் உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணம் நிறுத்தி வைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


