முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள 40 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Updated On :26 மே 2019, 5:33 am IST


விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள 40 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில், ஆண்டுதோறும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டும் பாடப் புத்தகங்கள் வழங்க கல்வித் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகம் பாடப் புத்தகங்களை தயார் செய்து அதனை அச்சிட்டு வழங்கி வருகிறது. புதிய கல்வித் திட்டங்களின் கீழ், கடந்தாண்டு 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமைத்து, புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள வகுப்புகளுக்கு...: இதன் தொடர்ச்சியாக, நிகழாண்டு 2 முதல் 5-ஆம் வகுப்பு வரையும், 7, 8, 10, 12-ஆம் வகுப்புகளுக்கும் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான புத்தகங்கள் சென்னை,  மதுரை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட்டு வந்துள்ளன. இந்தப் புத்தகங்களை வாங்கி பாடநூல் கழகத்தினர் மாவட்டங்கள்தோறும் கல்வித் துறைக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் 40 ஆயிரம் மாணவ,  மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இதற்கான பாடப் புத்தகங்கள் அண்மையில் வந்திறங்கின. புத்தகங்களை இந்தப் பள்ளிகளில் இருப்பு வைத்து, மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 கல்வி மாவட்டப் பகுதிகளுக்கு சனிக்கிழமை முதல் அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜூன் 3-இல் மாணவர்களுக்கு வழங்கப்படும்': இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 350 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 1,850 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் தேவையான இலவச பாடப் புத்தகங்களை பாடநூல் கழகத்திலிருந்து பெற்று தற்போது அனுப்பி வைத்து வருகிறோம்.
விழுப்புரத்திலிருந்து  6 கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அவர்கள் அங்கே புத்தகங்களை இருப்பு வைத்து அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க உள்னனர். 
இந்தப் பணிகள் ஜூன் 1-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் (ஜூன் 3)  பாடப் புத்தகங்களை வழங்க தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.
இதேபோல, தனியார் பள்ளிகளும் சென்னை பாடநூல் கழகத்திலிருந்து புத்தகங்களை விலைக்கு வழங்குகின்றனர். அதன்படி, விழுப்புரம் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு அரசு கிடங்கிலிருந்து பாட புத்தகங்களை அனுப்பும் பணிகள் இரு தினங்களாக நடைபெற்று வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.