/

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

News image

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.

Updated On :12 டிசம்பர் 2020, 7:16 am

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இதற்கான சிறப்பு முகாம் தொடங்கி இரு தினங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடக்கிறது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கிவைத்து வாக்காளர் சேர்ப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இரண்டு நாள்கள் இந்த சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.