திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசின் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம். தமிழக அரசின் கருவூலம் காலியாக உள்ளது. தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கடன் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு வாங்கிய பல ஆயிரம் கோடியில் 10%கூட திட்டங்களாக மாறவில்லை. தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக அரசு வாங்கிய கடன் தொகைக்கு ரூ.76,000 கோடி மட்டுமே வட்டியாக செல்கிறது. ரூ.80,000 கோடி ஜிஎஸ்டி வருவாயை மத்திய அரசு கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி கொடுத்துள்ளது அந்த நிதி எங்கே போனது?. திமுக அரசு வாங்கிய கடனில், மக்களுக்கு செய்தது என்ன?. திமுக அரசு வாங்கிய பெரும் கடன் தொகை எங்கே போனது?. திருவள்ளுவர், காமராஜர் மண் மு.க.ஸ்டாலினின் குடும்ப ஏடிஎம்ஆக மாறிப்போனது. நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு, திமுக அரசுதான்.
தமிழ்நாட்டுக்கு கிடைத்த நல்ல வர்த்தக வாய்ப்புகளை திமுக அரசு வீணடித்துவிட்டது. போதைப் பொருள்களால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கை பாழாகி வருகிறது. தமிழ்நாட்டில் 15,000 சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.
டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஊழல் செய்து, வழக்குகளில் சிக்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது வழக்குகள் உள்ளன. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதும். டாஸ்மாக் விற்பனையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
டாஸ்மாக் மோசடி விவகாரம் வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Union Minister Piyush Goyal has raised the question, 'Where did the loan taken by the DMK government go?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!

தாமரையுடன் இலையும் சேர்ந்து மலரும்: பியூஸ் கோயல்

விஜய் கனவுலகில் இருக்கிறார்; அவருக்கு எந்த புரிதலும் இல்லை: பியூஷ் கோயல் பேட்டி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


