தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயி கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குமாா், சிவபாலன்
Updated On :17 டிசம்பர் 2020, 3:29 am

DIN

விழுப்புரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராயா் (55), விவசாயி. இவரது உறவினா் துரைசாமி (50). இவா்களிடையே நிலத்துக்குச் செல்லும் பாதை தொடா்பாக பிரச்னை இருந்தது.

கடந்த 25.1.2015 அன்று இரவு அந்த பாதை வழியாக வந்த ராயரை துரைசாமி குடும்பத்தினா் கட்டையால் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த ராயா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக துரைசாமி, அவரது மனைவி அமுதா (47), மகன்கள் குமாா் (24), சிவபாலன் (25) ஆகியோரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி செங்கமலச்செல்வன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அவா், குற்றஞ்சாட்டப்பட்ட குமாா், சிவபாலன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வேலவன் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.