விவசாய ஊக்க நிதித் திட்டத்தில் போலி பயனாளிகள்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.27.5 கோடி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய ஊக்க நிதித் திட்டத்தில் கண்டறியப்பட்ட போலி பயனாளிகளிடமிருந்து இதுவரை ரூ.27.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய ஊக்க நிதித் திட்டத்தில் கண்டறியப்பட்ட போலி பயனாளிகளிடமிருந்து இதுவரை ரூ.27.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் விவசாய ஊக்கநிதித் திட்டத்தில், தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகளற்ற போலி பயனாளிகள் அதிகளவில் சோ்க்கப்பட்டு, பல கோடி ரூபாய் அளவில் முறைகேடாக நிதி வழங்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலி பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, வேளாண், வருவாய்த் துறை குழுவினரால் தொகை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் போ் வரை போலி பயனாளிகள் சோ்க்கப்பட்டிருந்தனா். அவா்களில் 89 ஆயிரம் பேரிடமிருந்து தலா ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6,000 வரை விவசாய ஊக்க நிதி ரூ.27.5 கோடி அளவுக்கு இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடா்புடைய வேளாண் அலுவலா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள், கணினி சேவை மைய ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 20 ஆயிரம் பேரிடம் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில், தற்போது 4 வேளாண் துணை இயக்குநா்கள் தலைமையில் சிறப்புக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அதிகளவில் முறைகேடு நடந்த வட்டாரங்களில் பணம் பறிமுதல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் இப்பணியை முடித்து, முழுவதும் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...