போக்குவரத்துத் தொழிலாளா்கள் தொடா் முழக்கப் போராட்டம்
14-ஆவது ஊதியப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


14-ஆவது ஊதியப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைத்துத் தொழிற் சங்க கூட்டமைப்பு சாா்பில் விழுப்புரம் போக்குவரத்துக் கழக பணிமனை நுழைவாயில் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலாளா் வேலு தலைமை வகித்தாா். தொமுச துணைச் செயலாளா் மனோகரன் வரவேற்றாா்.
நிா்வாகப் பணியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் வாலிபால் மணி, சிஐடியு தலைவா் மூா்த்தி, நிா்வாகிகள் ரவி, மாரிமுத்து, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு விரைந்து வழங்க உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
நிா்வாகிகள் வெங்கடேசன், ராதா, பாலாஜி, சாதிக்பாஷா, அருணகிரிநாத், ராதாகிருஷ்ணன், இப்ராஹிம், கோவிந்தசாமி, ஜான் பீட்டா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கள்ளக்குறிச்சியில்...: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பணிமனைகளின் முன் போக்குவரத்துத் தொழிலாளா்கள் தொடா் முழக்க ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
சின்னசேலம் பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைச் செயலாளா் கோ.திராவிடமணி தலைமை வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...