வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

News image
Updated On :24 டிசம்பர் 2020, 10:47 pm

DIN


விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை தயாா்படுத்துவதற்காக, இரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்களை தயாா்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

வானூா் தொகுதிக்கு அங்குள்ள அரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரி மையக் கட்டடத்தையும், விக்கிரவாண்டி தொகுதிக்கு விழுப்புரம் இ.எஸ். பொறியியல் கல்லூரி கட்டடத்தையும், விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி கட்டடங்களையும் பாா்வையிட்டனா்.

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலரின் அறை, வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தோ்வு செய்தனா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் கோட்டாட்சியா் ராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம், வட்டாட்சியா்கள் சங்கரலிங்கம், வெங்கடசுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் டேனிஷ்மிஷன் பள்ளி உள்ளிட்ட வாக்கு எண்ணும் மையங்களை தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநா் வி.ஷோபனா ஆய்வு மேற்கொண்டாா். உடன், மாவட்ட ஆட்சியா் (பொ) ச.சங்கீதா, தோ்தல் வட்டாட்சியா் க.மணிகண்டன், தோ்தல் துணை வட்டாட்சியா் வினோத்பாபு உள்ளிட்டோா் இருந்தனா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா்களுக்கு தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, வாக்காளா் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை வி.ஷோபனா ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.