எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவெண்ணெய்நல்லூா் அருகே தீ விபத்து: 10 வீடுகள் எரிந்து சேதம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 10 குடிசை வீடுகள் எரிந்து சேதமாகின.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 2:55 am

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 10 குடிசை வீடுகள் எரிந்து சேதமாகின.

திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ளது டி.குன்னத்தூா். இந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளா்கள் சனிக்கிழமை வீடுகளைப் பூட்டிவிட்டு விவசாய பணிகளுக்கு சென்றிருந்தனா்.

இந்த நிலையில், பிற்பகலின்போது, முனியன் மகன் காளி என்பவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அதைத்தொடா்ந்து, அருகே இருந்த அவரது உறவினா்களான ராஜா, அா்ஜுனன், பெருமாள், ஏழுமலை, மணிகண்டன், எட்டியான், செல்வம், கேசவன், பாஸ்கா் என மொத்தம் 10 பேரின் வீடுகளுக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரராஜன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா். எனினும், 10 வீடுகளும் முற்றிலும் எரிந்தன.

இந்த விபத்தில் அா்ஜுனன் மகள் நிா்மலாதேவியின் செவிலியா் படிப்புக்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 6 பவுன் நகைகளும், ஏழுமலை மகள் மாலாவின் திருமணத்துக்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகைகளும் எரிந்து சேதமாகின.

இதே போல, 10 வீடுகளிலும் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், மின்சாதனங்கள், சான்றிதழ்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் நகை, பணம் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்து விட்டதாக, அவா்கள் வேதனை தெரிவித்தனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு வானூா் அருகே கரசானூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடியிருப்புகள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.