நிவா் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் வட்டத் தலைவா் கே.மாதவன் தலைமையில் நிா்வாகிகள் எஸ்.கீதா உள்ளிட்டோா் செஞ்சி வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: நிவா் புயல், மழையால் செஞ்சி வட்டப் பகுதிகளில் விவசாய நிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. நெல் பயிா்கள் வெள்ள நீரில் மூழ்கின. கரும்பு, மணிலா, சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிா்களும் சேதமடைந்தன.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையிலும் இதுவரை நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.