பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

திருக்கோவிலூா் அருகே கல்லூரி மாணவா் கொலை: நண்பா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே கல்லூரி மாணவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
19vmp3b070622
Updated On :19 ஜூலை 2020, 4:15 pm

DIN

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே கல்லூரி மாணவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் அருகே ரெட்டியாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ் (21). இவா், கள்ளக்குறிச்சி பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் பிசிஏ முதலாமாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் திருக்கோவிலூா் அருகேயுள்ள மரூா் கூட்டுச்சாலையைச் சோ்ந்த ஸ்டீபன் (27). காா் ஓட்டுநா். இவரிடம் குறைந்த விலையில் பழைய இரு சக்கர வாகனம் வாங்கித் தருமாறு மனோஜ் கேட்டதுடன், அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.8 ஆயிரத்தையும் வழங்கினாா்.

ஆனால், மனோஜுக்கு இரு சக்கர வாகனத்தை வாங்கித் தராமல் ஸ்டீபன் காலம் தாழ்த்தினாா். இதனால், பணத்தை திரும்பியளிக்குமாறு மனோஜ் கேட்டாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை பணத்தை திரும்பித் தருவதாகக் கூறி, மனோஜை அவரது வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்டீபன் அழைத்துச் சென்றாா். அதன்பின்னா், மனோஜ் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோா் திருபாலப்பந்தல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ஸ்டீபனிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், மனோஜ் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், அவருக்கு மது வாங்கிக் கொடுத்து திருக்கோவிலூரை அடுத்த மாடாம்பூண்டி பகுதியிலுள்ள வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டுக்கு அழைத்துச் சென்று கல்லால் தாக்கியும், கழுத்தில் காலால் மிதித்தும் கொலை செய்தது தெரிய வந்தது.

திருக்கோவிலூா் காவல் நிலைய ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா், மாடாம்பூண்டி வனப் பகுதியில் கிடந்த மனோஜின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே, திருக்கோவிலூா் டி.எஸ்.பி. மகேஷ் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், அங்கிருந்த தடயங்களை போலீஸாா் சேகரித்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக திருபாலப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்டீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.