

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு, கரோனா தொற்று அறிகுறியால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயச்சந்திரன். கள்ளக்குறிச்சி கச்சராபாளையம் சாலையிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலக முகாம் அலுவலத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
அவருக்கு காய்ச்சலுடன் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
கரோனா தொற்று அறிகுறியோடு காவல் கண்காணிப்பாளர் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.