விழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. கடந்த 10-ஆம் தேதியன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோா் தீ வைத்ததில், சிறுமி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாா்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மேலும், சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.
அதன்படி சிறுமியின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி இன்று வழங்கப்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது பெற்றோரிடம் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் காசோலையை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


