மும்பையிலிருந்து சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்த 242 தமிழக தொழிலாளர்கள் 

மும்பையிலிருந்து தமிழக தொழிலாளர்கள் 242 பேர் சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்தனர்.
மும்பையிலிருந்து சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்த 242 தமிழக தொழிலாளர்கள் 
Updated on
1 min read

மும்பையிலிருந்து தமிழக தொழிலாளர்கள் 242 பேர் சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்ட சிறப்பு ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்ந்தது.

இந்த சிறப்பு ரயிலில் திருவண்ணாமலை மாவட்டம் 123 பேர், சேலம் மாவட்டம் 28 பேர், கள்ளக்குறிச்சி 62, கடலூர் 7, புதுவை 1, விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேர் என 242 பேர் வந்திறங்கினர். இவர்களை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வரவேற்று காலை உணவு வழங்கினார்.

முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டன. இதனையடுத்து அவர்கள் பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com