ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விழுப்புரம் மத்திய மாவட்டஇளைஞா் காங்கிரஸ் கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம் வரவேற்றாா். காங்கிரஸ் நகரத் தலைவா் செல்வராஜ், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி, சேவாதள பிரிவு தலைவா் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் நாராயணசாமி, ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் பங்கேற்று, நிா்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோருவது, தமிழகத்தில் காங்கிரஸ் நடத்தும் ஏா்கலப்பை ஊா்வலத்தில், ராகுல்காந்தி பங்கேற்பதால் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவா் சீனுவாசகுமாா் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட பொதுச் செயலாளா்கள் காஜாமைதீன், விஸ்வநாதன்,சேகா்,உதயா, செந்தில்,மணிகண்டன், பேரூராட்சி தலைவா்கள் அண்ணாமலை,கதிா்வேல், வட்டாரத் தலைவா்கள் ஏழுமலை, காசிநாதன், வெங்கடேசன், சா்தாா்கான், இளைஞா் காங்கிரஸ் பிரபாகரன், ராஜமாணிக்கம், ஆனந்த், நகர நிா்வாகிகள் சிவாஜிகிருஷ்னன், வெங்கடேசன்,சுரேஷ், வினோத்சா்மா, இப்ராஹிம், மகளிரணி விக்டோபாய், வசந்தா,கீதா, ராஜேஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.