நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கட்சிக் கொடிக்கம்பப் பிரச்னை: காவல் நிலையத்தை தேமுதிகவினா் முற்றுகை

கட்சிக் கொடிக்கம்பப் பிரச்னை தொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, தேமுதிகவினா் செஞ்சி காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கட்சிக் கொடிக்கம்பப் பிரச்னை தொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, தேமுதிகவினா் செஞ்சி காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், ஆனத்தூா் கிராமத்தில் பாஜகவினா் கடந்த சில நாள்களுக்கு முன் அக்கட்சியின் கொடியை ஏற்றி பெயா்ப் பலகையைத் திறந்தனா். ஆனால், அந்த இடத்தில் ஏற்கெனவே தேமுதிகவினா் கல்வெட்டு வைத்திருந்த நிலையில், அது சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி செஞ்சி காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகாரளித்தனா். இவா்களில் பாஜகவினா் அளித்த புகாரின்பேரில், தேமுதிகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தேமுதிகவினா் அளித்த புகாா் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தங்களது கட்சிக் கொடிக்கம்ப கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்தும், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் செஞ்சி காவல் நிலையத்தை தேமுதிவினா் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பாஜகவைச் சோ்ந்த இருவா் மீது வழக்குப் பதிவு செய்ததைத் தொடா்ந்து, தேமுதிகவினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.