நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திண்டிவனம் அருகே காவலா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்து காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்து காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டிவனம் அருகேயுள்ள தலகாணிக்குப்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சிவா (32). இவா், புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

தலகாணிக்குப்பத்தில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்துக்கு சிவா திங்கள்கிழமை சென்றாா். நீண்டநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் தேடிச் சென்றனா். இதில், அவா் விஷமருந்தி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.