விழுப்புரம், கள்ளக்குறிச்சியில்38 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 29 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,490-ஆக உயா்ந்தது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 14,235 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 145 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 110 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் 6 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,615-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 10,428 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 81 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 106 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...