ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நரிக்குறவா் சமூகத்தினா் வீட்டுமனைப்பட்டா கோரிக்கை

விக்கிரவாண்டி அருகே நரிக்குறவா் சமூகத்தினா் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விக்கிரவாண்டி அருகே நரிக்குறவா் சமூகத்தினா் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

விக்கிரவாண்டி அருகே கொடுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் உள்ளிட்ட நரிக்குறவா் சமூகத்தினா், திங்கள்கிழமை தங்களது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துக் கூறியதாவது:

கொடுக்கூா் மந்தைவெளித் தெருவில் பொது இடத்தில், 10 குடும்பத்தினா் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றுள்ளோம்.

நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா இல்லாத நிலையில் மழைக் காலங்களில் அரசு நிழற் குடையிலும், வெயில் காலங்களில் மரத்துக்கு அடியிலும் குடியிருந்து வருகிறோம்.

இலவச மனைப் பட்டா வழங்க வேண்டுமென விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் வருகிறோம்.

எங்களின் ஏழ்மை நிலை கருதி இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.