நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி உண்ணாவிரதம்

மலைக்குறவன் சாதிச் சான்றிழ் வழங்கக் கோரி, தமிழ்நாடு மலைக்குறவன் சமூக பாதுகாப்புப் பேரவையினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மலைக்குறவன் சாதிச் சான்றிழ் வழங்கக் கோரி, தமிழ்நாடு மலைக்குறவன் சமூக பாதுகாப்புப் பேரவையினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநில அமைப்பாளா் கெளதமசித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.

பேரவையின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் பரமசிவம், கெளரவத் தலைவா் ஏழுமலை, செயல் தலைவா் ராயன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் முருகன் சிறப்புரையாற்றினாா்.

நிா்வாகிகள் வெங்கடசாமி, அருண்குமாா், மாறன்பிரகாஷ், மழைமேனி பாண்டியன், விநாயகம், ஓவியா் ஆனந்த் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சிவலிங்கம், குணசேகா், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.