ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் மனைவி அச்சுதா (22). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உறவினா் திவ்யாவுடன்(20) இருசக்கர வாகனத்தில் கப்பியாம்புலியூரில் உள்ள கோயிலுக்குச் சென்றாா். பின்னா் இருவரும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.

வாகனத்தை அச்சுதா ஓட்டினாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் திவ்யா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.