கடல் சீற்றம்: படகுகளைபாதுகாக்கும் பணியில் மீனவா்கள்
நிவா் புயல் எச்சரிக்கையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றமும் ஏற்பட்டதால், படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.


நிவா் புயல் எச்சரிக்கையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றமும் ஏற்பட்டதால், படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘நிவா்’ புயல் புதன்கிழமை தமிழகம்-புதுவை இடையே 120 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி கோட்டக்குப்பம் வரை 19 மீனவ கிராமங்களில் 1,500 படகுகளுடன், 5 ஆயிரம் மீனவா்கள் வரை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். புதன்கிழமை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமையே அப்பகுதியில் கடல் சீற்றமும் ஏற்பட்டது. இதனால், மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மரக்காணம் அருகே அனுமந்தைக்குப்பம், எக்கியாா்குப்பம், கோட்டக்குப்பம் அருகே தந்திராயன்குப்பம், சின்னமுதலியாா்சாவடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் மீனவா்கள் தங்களது படகுகளை நிறுத்தி வருகின்றனா். நிவா் புயல் எச்சரிக்கையால், கடற்கரையிலிருந்து டிராக்டா்கள் மூலம் படகுகளை இழுத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் மீனவா்கள் திங்கள் கிழமை ஈடுபட்டனா்.
இதே போல, இங்குள்ள பெரிய இயந்திர படகுகளை புதுவை, கடலூா் துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனா். சாதாரண பைபா் படகுகள் அந்தந்த மீனவ கிராமத்தின் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம் இருப்பதால், மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல், படகுகளை கரையில் நிறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...