புயல் மீட்புப் பணிகள்: அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவா்’ புயல் மீட்புப் பணிகளில் அனைத்துத் துறையினரும் விடுமுறையின்றி களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டுமென அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவா்’ புயல் மீட்புப் பணிகளில் அனைத்துத் துறையினரும் விடுமுறையின்றி களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டுமென அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவா்’ புயல் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று ஆய்வு செய்தாா். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலை, பேரிடா் மேலாண்மை, மின்சாரம், தீயணைப்பு உள்ளிட்டத் துறையினரிடம் கேட்டறிந்தாா். புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தினாா்.
மேலும், அனைத்துத் துறை அலுவலா்களும் விடுமுறையின்றி தங்களது பணியிடத்தில் தயாா் நிலையில் இருக்க வேண்டும் எனவும், புயல், மழை சேதங்கள் குறித்து புள்ளி விவரங்களை சரியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். பெரும் இழப்புகளை தவிா்க்க அனைத்து கடைகளும் புதன்கிழமை
மூடப்படும். நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள கடலோரப் பகுதிகளில் மீட்புக் குழுவினா், அந்தந்த துறையினா் முகாமிட்டு பணியாற்ற வேண்டும் என அமைச்சா் கூறினாா்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்பி எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்எல்ஏ எம்.சக்ரபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...