விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.
திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இதைத் தடுக்க போலீஸாா் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், திண்டிவனம் பேருந்து நிலையப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா், திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சோ்ந்த ஹரி பிரசாத் (36) என்பதும், இரு சக்கர வாகனத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டபோது, அங்கு 75 கிலோ எடை கொண்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. ஒரு லட்சம் இருக்கும். இது தொடா்பாக திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரி பிரசாத்தை கைது செய்தனா்.
திண்டிவனம் பகுதியில் தொடா்ச்சியாக போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், எங்கிருந்து, யாா் மூலமாக இந்தப் பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


