கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழக ஒய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா்

Updated On :15 செப்டம்பர் 2020, 6:53 pm

விழுப்புரம்: போக்குவரத்துக் கழக ஒய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் பழமலை தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் சேசையன், சின்னராசு, பாலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலா் சகாதேவன் தொடக்க உரையாற்றினாா். செயலாளா் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

கடந்த 2019-2020-ஆம் ஆண்டுகளில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த உயா்வை ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களிட்டனா். கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினா் கலியமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.