கரோனாவுக்கு டாஸ்மாக் ஊழியர் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியானதால், கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கரோனாவுக்கு டாஸ்மாக் ஊழியர் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியானதால், கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவர் கரோனாவுக்கு திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனால் அச்சமடைந்த அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் திரண்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள், உயிரிழந்த செஞ்சி மேற்பார்வையாளருக்கு அஞ்சலி செலுத்தி பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும், 

டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மாவட்டத்தில் உள்ள 220 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com