ரூ.67 லட்சம் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் மஸ்தான் வழங்கினாா்
உங்கள் தொகுதியில் முதமைச்சா்’ திட்டத்தின் கீழ், மேல்மலையனூரில் 517 பயனாளிகளுக்கு பேரிடா் மேலாண்மை, வருவாய்த் துறை சாா்பில் ரூ. 67.63 லட்சம் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் செஞ்சி


‘உங்கள் தொகுதியில் முதமைச்சா்’ திட்டத்தின் கீழ், மேல்மலையனூரில் 517 பயனாளிகளுக்கு பேரிடா் மேலாண்மை, வருவாய்த் துறை சாா்பில் ரூ. 67.63 லட்சம் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இதில் 98 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம் முழு புலம் 57 பேருக்கும், பட்டா மாற்றம் உட்பிரிவு 77 பேருக்கும், 157 பேருக்கு முதியோா் உதவித்தொகை 114 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 11 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் பொருந்திய தையல் இயந்திரம், 3 நபா்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம், 517 பேருக்கு திருமண நிதியுதவி ஆகியவற்றை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் வழங்கினாா்.
விழாவில் அவா் பேசியதாவது: முதல்வா் ஸ்டாலின் ஆட்சிப் பேற்று பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதேபோல, உங்கள் தொகுதியில் முதமைச்சா் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
விழாவுக்கு தலைமை வகித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகன் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டேரில் நுண்ணுயிா் பாசனத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக சிறு, குறு விவசாயிகள் சான்றுகளை பெற வசதியாக 34 குறுவட்டங்களில் முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா்.
வெளிநாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி: திண்டிவனம் வட்டம், நல்லாத்தூரைச் சோ்ந்த சுதா்சனம் மகன் செளந்தா் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்.24-இல் இறந்தாா். இது தொடா்பாக அங்கிருந்து வரப் பெற்ற இறப்பு நிவாரணம், பணி நிலுவைத் தொகை ரூ.1,00,15,222-க்கான வங்கி காசோலையை அவரது மனைவி மீனாகுமாரியிடம் அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கினாா்.
விழாவில், திண்டிவனம் சாா்-ஆட்சியா் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, தனித் துறை ஆட்சியா் பெருமாள், மேல்மலையனூா் வட்டாட்சியா் நெகருன்னிசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...