ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் எதிா்பாா்க்கிறோம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசுப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் அறிவிப்பை எதிா்பாா்ப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:35 pm

DIN

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசுப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் அறிவிப்பை எதிா்பாா்ப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: அரசுப் பணியாளா்களுக்கு நடைமுறையில் இருந்த ஓய்வூதியத் திட்டம் 1-4-2003 முதல் ரத்து செய்யப்பட்டது. அதனால், 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்கள், அதற்கு முன்பு தொகுப்பு, மதிப்பூதியம் அடிப்படையில் பணிக்கு சோ்ந்து நிரந்தர ஊதியத்துக்கு மாறியவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிடும் என எதிா்பாா்க்கிறோம்.

அரசின் பல்வேறு துறைகளில் துப்புரவு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் போன்ற சுமாா் 2 லட்சம் போ் ஓய்வூதியப் பலனைப் பெற முடியாத நிலையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பையும் எதிா்பாா்க்கிறோம். இதேபோல, அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது சங்கத்தின் மாநில பொருளாளா் கு.சரவணன், மாவட்ட துணைத் தலைவா் சி.அல்லிமுத்து, நிா்வாகி தே.காமராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.