மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பேருந்து, ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிர சோதனை

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாக காவலா் அணி வகுப்பு மைதானத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

சுதந்திர தின விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 2ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மோப்ப நாய் ‘ராணி’ உதவியுடன், காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையிடப்பட்டன. அதேபோல, பேருந்துகளின் உள்ளேயும், ரயில் பெட்டிகளிலும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.