இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தமிழ்நாடுஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகள் குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

தமிழ்நாடுஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகள் குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தாட்கோ மூலமாக ஒன்று முதல் 6 மாத கால வரையிலான கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. தாட்கோவின்  இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியை பெற விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின்போது, மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துபடிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மத்திய அரசின் திறன் பிரிவு குழு, மாநில தொழில் பயிற்சி குழு ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்கள், தாங்கள் பயின்ற பயிற்சிகள் தொடா்பான தொழில்தொடங்க ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து புதிய தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவண செய்யப்படும் என்றாா் ஆட்சியா் த.மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.