கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெயலலிதா பல்கலை விவகாரம் : விழுப்புரத்தில் தர்னாவில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் கைது

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது ச

News image

ஜெயலலிதா பல்கலை. விவகாரம் : விழுப்புரத்தில் தர்னாவில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் கைது

Updated On :31 ஆகஸ்ட் 2021, 7:39 am

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் சண்முகம் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா பல்கலை கழகத்தையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின் சில நிமிடங்களில்  உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சி.வி.சண்முகம் கைதை கண்டித்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகே அதிமுகவினர் திரளாக சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினர் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.