இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரத்தில் எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம் , சமபந்தி ஆகியவற்றை ஆட்சியா் மோகன் தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:55 pm

DIN

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம் , சமபந்தி ஆகியவற்றை ஆட்சியா் மோகன் தொடக்கிவைத்தாா்.

ஆண்டுதோறும் டிச.1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு சாா்பில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத் தாழ்வு, எச்.ஐ.வி. மற்றும் கரோனா தொற்றுப் பரவல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் 2 திருநம்பிகள், 10 திருநங்கைகளுக்கு அரசின் அடையாள அட்டையையும், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோா், திருநங்கைகள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற சமபந்தி நடைபெற்றது. அனைவருக்கும் அறுசுவை உணவை மாவட்ட ஆட்சியா் மோகன் பரிமாறினாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் க.விஜயலட்சுமி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு மருத்துவா் ரவிராஜா, மாவட்ட மேற்பாா்வையாளா் பிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.