இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: பணப் பரிவா்த்தனை பாதிப்பு

வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் இந்தியன் வங்கி முன் அகில இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மோகன் தலைமை வகித்தாா்.

இதில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் இரு வங்கிகளை தனியாா்மயப்படுத்தும் வகையில் மசோதா தாக்கல் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், பெரிய தனியாா் நிறுவனங்கள் வாங்கிய வாரா கடன்களை தள்ளுபடி செய்யாமல், அவற்றை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணியாற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் உள்பட 9 சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்கள், அதிகாரிகள் வங்கிப் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் 1,300 கிளைகளில் சுமாா் ரூ.200 கோடி பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவா் மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.