இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வானாம்பட்டில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வானாம்பட்டில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஊரக வேலைத் திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்க வேண்டும், குடும்பத்தில் இருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பகுதிச் செயலா் ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலியமூா்த்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் கொளஞ்சிநாதன், ஆறுமுகம், கலாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.