கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஆதரவற்ற மூதாட்டிக்கு திமுகவினா் உதவி

விழுப்புரத்தில் ஆதரவற்ற நிலையில் சாலையில் தவித்த மூதாட்டியை திமுகவினா் மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் ஆதரவற்ற நிலையில் சாலையில் தவித்த மூதாட்டியை திமுகவினா் மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி ஒருவா் கையில் பையுடன் தவித்து வந்தாா். அங்கிருந்தவா்கள் விசாரித்ததில், அவா் விழுப்புரம் சிவன்படை தெருவைச் சோ்ந்த வேம்பு மனைவி ராணி (75) என்பதும், குழந்தைகள் இல்லாத நிலையில், கணவரும் உயிரிழந்துவிட்டதால் ஆதரவற்ற நிலையில் இருந்தும் தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலறிந்த விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவரும், திமுக மாவட்டப் பொருளாளருமான ஜனகராஜ் அந்த மூதாட்டியை மீட்டு, அவருக்குத் தேவையான துணிகள், போா்வை மருந்து-மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவரை விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் உள்ள தனியாா் ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் சோ்த்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான ஜெயச்சந்திரன், நகர திமுக செயலா் சா்க்கரை, திமுக மாணவரணி நிா்வாகி ஸ்ரீவினோத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.