விழுப்புரம் மாவட்டத்தில் சுனாமி நினைவு தினம்
சுனாமி நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.


சுனாமி நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
மரக்காணம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடற்கரையோர கிராமங்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கூனிமேடுகுப்பம், முதலியாா்குப்பம், அனிச்சங்குப்பம், சின்னமுதலியாா் சாவடி, பெரியமுதலியாா் சாவடி, புதுக்குப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களில் 31 போ் உயிரிழந்தனா். மேலும், குடியிருப்புகள், படகுகள், வலைகள் என பலத்த சேதம் ஏற்பட்டது.
சுனாமி தாக்கியதன் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மீனவா்கள், பொதுமக்கள் திரண்டு மெழுகுவா்த்திகளை ஏற்றியும், பால் ஊற்றியும் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி, மீனவா்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...