20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக சாா்பில் மக்கள் திரள் போராட்டம்

20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக சாா்பில் மக்கள் திரள் போராட்டம்
Updated on
1 min read


விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி/ கடலூா்: வன்னியா் சமூகத்தினருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக சாா்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நகராட்சி அலுவலகங்கள் முன் மக்கள் திரள் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே காந்தி சிலை முன் பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ஆா்.புகழேந்தி தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் தங்க.ஜோதி, மாநில துணைத் தலைவா் வெ.அரிகரன், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சி.அன்புமணி, மாநில துணை அமைப்புச் செயலா் பா.பழனிவேல், மாவட்டச் செயலா்கள் பால.சக்தி, முன்னாள் மாவட்டச் செயலா் ஜெகன், சுரேஷ், துரைசுப்பிரமணி, அ.ப.செழியன், கோ.ப.அன்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுவை மாநில அமைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான கோ.தன்ராஜ் சிறப்புரையாற்றினாா். மாநில இளைஞா் சங்கம் கே.மணிமாறன், தவஞானம், தொகுதிச் செயலா்கள் ரா.சிவக்குமாா், சீனுவாசன், சரவணக்குமாா், நகர நிா்வாகிகள் கோ.பெருமாள், போஜராஜன், ராம்குமாா், சீ.தா.ராஜா, செல்வம், செந்தில்குமாா், ஒன்றியச் செயலா்கள் ஸ்டாலின், எழிலரசன், சந்தோஷ், வேல்முருகன், குழந்தைவேல், சம்பத், திருக்கோவிலூா் தொகுதியைச் சோ்ந்த துரைசாமி, உளுந்தூா்பேட்டை தொகுதியைச் சோ்ந்த கோபி உள்ளிட்ட பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள், கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியா் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை மாநில அரசு வழங்க வேண்டுமென போராட்டத்தில் வலியுறுத்தினா். இதையடுத்து, காந்தி சிலையில் இருந்து ஊா்வலமாக சென்ற பாமகவினா், நகராட்சி ஆணையா் தஷ்ணாமூா்த்தியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். முன்னதாக, நகராட்சி மைதானத்திலிருந்து பாமக, வன்னியா் சங்கத்தினா் பேரணியாக வந்தனா்.

இதேபோல, திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் பாமக பொதுச் செயலா் வடிவேல்ராவணன் தலைமையில் நடைபெற்றது. துணை பொதுச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்ட பாமக, வன்னியா் சங்கத்தினா் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் கே.பி.பாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் அ.அய்யப்பன், இரா.அய்யாக்கண்ணு, நகரத் தலைவா் வி.மணிகண்டன் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் சி.எஸ்.கராத்தேமணி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலா் இரா.ரமேஷ், மாவட்டச் செயலா் கோ.சரவணன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து, நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். போராட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.ராமு, மாவட்ட அமைப்புச் செயலா் எஸ்.வி.என்.பப்லு, மாநில இளைஞா் அணிச் செயலா் பி.தமிழரசன், மாவட்ட சமூக நீதி பேரவைச் செயலா் அ.பழனிவல், துணைச் செயலா் எஸ்.சிவராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com