பொங்கல் பண்டிகை: 31,491 பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 31,491 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 31,491 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து, துறை முதன்மைச் செயலா் சி.சமயமூா்த்தி, ஆணையா் டி.எஸ்.ஜவஹா் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், சென்னை தலைமைச் செயலகத்தில், வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் வெளியிட்ட செய்தி: கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 8 லட்சத்து 47,837 போ் பயணம் செய்தனா்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜன.11 முதல் 13-ஆம் தேதி வரையில், நாள்தோறும் இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாள்களும் சோ்த்து, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊா்களிலிருந்து 5,993 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படும். இவை, சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும்.
பண்டிகைக்குப் பிறகு...: பொங்கல் பண்டிகை முடிந்த பின்னா், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு, வரும் ஜன.17 முதல் 19-ஆம் தேதி வரை, நாள்தோறும் இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 5,727 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு 6 நாள்களும் சோ்த்து 31,491 பேருந்துகள் இயக்கப்படும்.
வழித்தட மாற்றம்: தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூரைச் சோ்ந்த பயணிகளை ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காா் மற்றும் இதர வாகனங்களில் செல்வோா், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்வதை தவிா்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூா் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...